Wednesday 11 April 2012

சித்திரங்கள் நான் வரைந்தால் உன் முகம் தான்...!!!

என் நெஞ்சமதில் வந்தமர்ந்த
வஞ்சி மகளே.
என் சொந்தமெல்லாம் நீ ஆன
தங்க நிலவே.


இன்பம் என்ற சொர்க்கமதில்
என்னை அமர்த்தி - இப்போ
ஏக்கமுடன் எனை விட்டு
எங்கு சென்றாய்...?


கற்பனைக்குள் சிக்காத
கனக மணியே.
என்னை விற்பனைகள் செய்துவிட
ஏன் தான் துணிந்தாய்.


சொர்ப்பனத்தில் எப்பொழுதும்
நின் முகம் தான்.
அற்புதம் நான் என்பதனை
ஏன் மறந்தாய்.


உட்சவம் தான் தினம் நடக்கும்
என் மனதில் - உருவம்
கற்சிலை போல் ஆன நிலை
ஏன் அடைந்தாய்.


பொற்கிளியாய்  உன்னை அள்ளி
பூட்டி வைத்தேன் - பொன்மகளே
போதும் என்றா என் மனதில்
புளியை வார்த்தாய்.


சித்திரங்கள் நான் வரைந்தால்
உன் முகம் தான்.
சித்திடையே என்னவளே
ஒரு வரம் தா.


சிற்றுளி போல் எனை உருக்கி
சிலைகள் செய்யாயோ.
உன் உருவம் போல் - பல
சிலைகள் செய்வாயோ.




கவிஞர்: சாதுரியன்