Monday 28 May 2012

அன்பே என்னுடன் எதற்க்காக பேச மறுக்கிறாய்...!!!

பாசம் வளர்த்தேன் பழகத் துடித்தேன்
காலம் முழுதும் கவிதை வடிப்பேன்.
கலங்க வைக்கும் கவிதை நீயோ..?

தேகம் வியர்க்கும் நிலமை எனக்கு
அள்ளிக் கொடுத்த அழகுத் தளிரே.
எந்த உறவும் உன்னை விடவும்
எந்தன் வாழ்வில் என்றும் இல்லை.

கொஞ்சும் மழலைக் குழந்தை நீயே
கூடிக் குலவும் நிலமை தாவேன்.
அஞ்சும் நிலமை எனக்கு வேண்டாம்
அணைக்கும் நினலே அருகில் வா நீ.

பஞ்சவர்ணக் கிளியே எந்தன் 
பருவ முல்லைக் கோடியே நீயும்.
உருவம் மறைத்து தினமும் என்னை
உருக வைத்தல் சரியோ கண்ணே.

நீண்ட வானில் வர்ணம் தீட்ட
துணிந்து விட்ட கலைஞன் ஆனேன்.
வானவில்லை போலே நீயும் - பல
வர்ணம் போல எண்ணம்மாரி
என்னை ஏன்தான் கொல்ல நினைத்தாய்..?

வண்ணத் தமிழில் உன்னை வடிக்க
வார்த்தை தேடி ரொம்பக் களைத்தேன்.
உந்தன் மனதின் எண்ணம் அறிய
வங்கக் கடலில் மூழ்கத் துடித்தேன்.

தமிழின் அர்த்தம் கண்டேன்.
கடலின் ஆழம் கண்டேன்.
உன்னை வடிக்க வார்த்தை இல்லை.
உன் மனதின் ஆழம் காணவேண்டி 
உறக்கம் கலைத்தேன்.
உதிரம் வடித்தேன்.

முடியவில்லை எந்தன் உயிரே,
முடிவு கூட எந்தன் உயிரே.

கண்ணின் மணியே என் கண்ணின் ஒளியே
உன்னை விட்டுப்பிரிய என்றும் நினைக்கேன்.
பேசமறந்தால் என்னை மறப்பேன்.
உயிரை துறப்பேன்.
அன்பே என்னுடன் எதற்க்காக பேச
மறுக்கிறாய்...!!!



கவிஞர்: சாதுரியன்  

Wednesday 16 May 2012

நீ விட்டு சென்ற சுவடு இன்றும் என் நெஞ்சில் நிலைப்பதாலே........!!!

எந்தன் மன தோட்டத்துக்குள்
வீசி போன தென்றல் காற்றே.
ஏன் தான் நீயும் ஓடிப்போனாய்
எங்கே நீயும் வீசுகின்றாய்...?

என்னில் நீயும் வீசும் போது
அள்ளி உன்னை அனைத்து கொண்டேன்.
அரவம் போல வந்து என்னுள்
உலவிப்போன பின்னும் - எந்தன்
நெஞ்சில் சுவடு மாறவில்லை
நினைவு என்றும் அழியவில்லை.

பொங்கு தமிழ் தென்றல் காற்றே
பொழியும் மாறி உந்தன் மூச்சே.
போவாய் என்று நினைக்கவில்லை.
போன பின்னே எந்தன் நிலை
மாறிப்போச்சு - என்
கண்ணும் இங்கே மாறியாச்சு.

கவலை கொள்ளவில்லை நானும்
கற்றுவிட்டேன் வாழ்க்கைப் பாதை.
விபரம் உள்ள மனிதனாக்கி
போன தென்றல் காற்றே கொஞ்சம்
புதிய நிலை பார்த்து சொல்லு.

புகழ்ச்சி நானும் பொற்று வாழ
புலமை தந்த புனிதம் எல்லாம்
உன்னைச் சேரும்.
கலக்கமில்லா கலவை நீயோ - இன்றும்
என் உறக்கம் போக்கும் குழவி நீயோ...?

வணங்குகிறேன் உந்தன் நிலைக்கு
கிறங்கவில்லை நானும்.
நீ விட்டு சென்ற சுவடு இன்றும்
என் நெஞ்சில் நிலைப்பதாலே........................


கவிஞர்: சாதுரியன் 

Monday 7 May 2012

என் இதயத்துக்கு ஒளிகொடுத்த என் நிலாவுக்கு பிறந்த தினம்...!!!

ஓடுகின்ற வெண்ணிலாவே
ஒரு நிமிடம் நில்லாயோ.
உன் அழகை விஞ்சிவிட்ட
என்னவளை பார்க்க என்று 
ஒரு நிமிடம் நில்லாயோ.


காடு மலை ஏறி போகும்
கறுப்பு நிலா நீ.
தங்க ரதம் ஏறி வரும்
தங்க நிலா பார்க்க நிற்காயோ.


பாதி நாளில் தேய்ந்து நீயும்
பௌர்ணமியாய் உருவம் காட்டுவாய்.
என் பருவ நிலா எப்பொழுதும்
வளர்ந்து வளர்ந்து முழு உருவம் காட்டுவாள்.


நீ தோன்றிய ஆண்டு பல கோடி
தினம் தேய்ந்து தானே வளர்கிறாய்.
இவள் தேன்றிய ஆண்டு மூவேழு
முடிந்து வருடம் இரண்டாச்சு.


இன்றும் பூத்து குலுங்குகிறாள்
பிறந்த நாளில் பௌர்ணமியாய்
விளங்குகின்றாள்.


பார்த்து நீயும் சென்று விடு
பாதியான வெண்ணிலாவே.
சேதி ஒன்று சொல்லிவிடு
அவள் சிரிப்பொலியை கொள்ளையிடும்
மன்னவன் நான் தான் என்ற
சேதி ஒன்று சொல்லிவிடு.


கவிஞர்: சாதுரியன்