Tuesday 18 December 2018

வேர் இழந்து விருஷம் ஒன்று சாஞ்சு போச்சுதே...!


காற்றடித்து நூல் அறுத்த 
பட்டம் போல்
நேற்றிருந்த சொந்தம் ஒன்று
என்னை நீங்கி போச்சு

நினைவுகளை சுமந்து கொண்டு
வாழ்வதாலே
கனவுகளும் வெறுப்பாய் தான்
என்னை கொல்லுது

வேர் இழந்து விருஷம் ஒன்று
சாஞ்சு போச்சுதே
ஊர் இழந்து வந்த பின்பும்
உறக்கம் இல்லையே

கார் இருட்டில் தேடுகிறேன் 
எந்தன் காதலை
என் கண்ணின் மணி தொலைந்து போச்சு
அவள காணல

ஊர் முழுக்க என்னை பார்த்து
கேலி பண்ணுது
ஓட்டை பையில் போட்ட பூ போல்
நானும் ஆகினேன்...!

கவிஞர்: சாதுரியன் 

Friday 14 December 2018

உன் மடிமீது துயில் கொள்ள நிலையான வரம் சொல்லு...!



சொர்க்கமே வந்து என்னை வரவளைதது
உன் முகம் பார்த்திட சொந்தமனவளே...!
சோகம் ஏன் எனக்கு சொந்தமானது...?

வார்த்தைகள் வரைகின்ற வசந்த கீதம்
வாசம் கொள்ளவில்லையடி
உன் மடிமீது துயில் கொள்ள
நிலையான வரம் சொல்லு

உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மண்ணோடு  போகும்  வரையும்
மறந்திட முடியுமோடி...!

அழகென்ற பெயர் கொண்ட
ஆசை அடங்காத இராட்சசியோ
இதழோடு இதழ் சேரும்
இரவுகள் தினம் வேண்டும்...!


கவிஞர்: சாதுரியன் 

Wednesday 12 December 2018

நெஞ்சில் சோகம் வேண்டாம் கண்ணே...!



எனது நினைவு உனது நிழலில் 
கலந்து கொண்டதை
நிலவு வந்த பொழுது நீயும் 
அறிந்ததில்லையோ

உலவுகின்ற நிலவாய் 
எனது மனதில் நீயும் 
உரசும் போது கூட 
உணரவில்லையோ நீயும் 
இன்பசுகம் அறிந்ததில்லையோ

என் உருவம் வந்து உன்னுள்
உறக்கம் கொள்ளும் முன்பே - என்
நினைவு உந்தன் நெஞ்சை
நெகிழவைத்தது ஏனோ..?

பருவ வெண்ணிலாவே
பருக என்னை நீயும்
நாளை எண்ணி வாழ்ந்திடு
நானும் உன்னை எண்ணியே
மெழுகாய் மெல்ல உருகிறேன்

நெஞ்சில் சோகம் வேண்டாம் கண்ணே
நிலவை போல தேயாதே
உறவில் நாளும் நானே தானே
உணர்வு முழுதும் உனக்கு தானே
உயிரும் நீயே...! உணர்வும் நீயே...! உள்ளமும் நீயே...!

கவிஞர்: சாதுரியன் 

Monday 10 December 2018

உன் நினைவில் வாழ்கிறேன்...!



நிலவுபோல் தேய்வதில்லை
உந்தன் ஞாபகம்
கனவுகளில் மிதக்கவைக்கும் 
உந்தன் பூமுகம்

நெஞ்சில் நிற்கும் சொந்தமான
வண்ண ரோஜாவே
நெஞ்சில் நிற்கும் வார்த்தைகளை
அள்ளி வீசியே

நெஞ்சணைக்கும் நாட்களினை 
சொல்லி போவேண்டி
பஞ்ச்சணைக்கு போகும் வரை
சின்ன பிள்ளை தான்
பரிதவிக்க விட்டுடாதே - என் 
வண்ண முல்லையே

கருவறையில் நான் பிறந்தேன்
பச்சை பிள்ளையாய்
உந்தன் கருவறைக்குச் சொந்தமாகும்
எந்தன் பிள்ளையே

காதல் சுகம் தொடர்ந்து விட்டால்
இந்த வார்த்தைகள்
கடுகளவும் பொய்க்காது - எந்தன்
காதல் பைங்கிளி

சிறகடிக்கும் நாள்வரைக்கும்
சிறை போல் வாழ்ந்திடு
சிறையெடுக்க நான் வருவேன்
கண்ணே தூங்கிடு
கலக்கம் இன்றியே...!!!


கவிஞர்: சாதுரியன் 

Sunday 9 December 2018

நீ எனக்கு இஸ்ர தேவதை...!!!



சொப்பனத்துப் பூங்குயிலே
சொந்தமான தாமரையே
அற்புதங்கள் புரிவதிலே - நீ
அமுதரசக் கிண்ணமடி

கற்பனைக்கு உகந்தது போல்
கழி நடனம் புரிந்து என்னை - காமனவன்
பண்டிகைக்கு தினம் அனுப்பி வைப்பவளே

சொற்பனங்கள் ஏன் உனக்கு 
தப்பாய்த் தோணுது
சொக்கத் தங்கம் எப்பொழுதும் 
தகரமாகுமா...?

நித்தமும் என் நெஞ்சணையில்
உறக்கம் கொள்ளடி
நினைவுகளை மறந்து என்னுள் 
உறவு கொள்ளடி

எப்பவும் நீ எனக்கு இஸ்ர தேவதை - இணைந்து
நீயும் வாழ்ந்து விட்டால்
நானும் பெறுவேன் காமன் பண்டிகை...!

கவிஞர்: சாதுரியன் 

என்றும் நீ என்னுள்...!!!


கருகியது என் வாழ்வு - ஆனால் 
கருகி போகவில்லை என் காதல்

உயிர் கொண்டு உன்னை 
பாதுகாக்கின்றேன்
என் உயிர் இருக்கும் வரைக்கும்
நான் உன் மீது கொண்ட 
காதலும் இருக்கும்

என் காதல் இருக்கும் வரைக்கும்
என்றும் நீ என்னுள் இருப்பாய்...!

கவிஞர்: சாதுரியன் 

நான் இழந்தது...!!!




நான் இழந்தது என்னவென
திடுக்கிட்டு
உணர வைத்து விடுகிறது
எதிர் பாராமல்
யாரோ யாரையோ
உன் பெயர் சொல்லி
அழைக்கும் அந்த நொடி..!


கவிஞர்: சாதுரியன்