Wednesday 12 December 2012

அவள் நினைவைச் சுமந்து நான்.......!!!

ஊரை விட்டு வந்த பின்பும் - அன்பே 
என்னை நீ கொல்லும் வித்தை 
கற்றுக் கொண்ட பள்ளி எங்கே...!

ஆளை மயக்கும் வித்தை எல்லாம் 
கண்டு கொண்டேன் உன்னிடத்தில் - ஆனால் 
என்னை கொல்லும் வித்தை மட்டும் 
எங்கே கற்றாய் சொல்லாய் என் கிளியே...!

ஊரை விட்டு உறவை விட்டு 
நாடு விட்டு எங்கோ போயிற்றேன் - தினம் 
ஊனை உருக்கி உடலை உருக்கி 
உன்னை நினைக்கும் என்னை மட்டும் 
தினமும் நினைக்க ஏன்  தான் மறுத்தாய்...!

தென்றல் காற்றே தெள்ளு தமிழே 
சந்தம் சேர்த்து கவிகள் படைப்பேன் 
சுருதி சேர்த்து படிப்போம் வாடி 
சொர்க்கம் தேடி நாளும் போவோம் 
வாடி நீயே....................

கவிஞர்: சாதுரியன் 

Thursday 20 September 2012

உன்னை பார்த்தவுடன் அதிசயித்தேன் நான்....!!!

                                                   
காகிதத்தில் நான் வரைந்த வரிகள் எல்லாம்
என்னை காதலிக்கு பதில் அனுப்ப துடிக்குதடி.

பூவனத்தில் நான் பறித்த பூக்கள் எல்லாம்
என் தேகனர்த்தம் புரிய நிதம்
பூஜை அறை அழைக்கிறதே.

நான் காதலித்த தேவதையோ 
கண்ணெதிரில் இன்று இல்லை.
என்றிருந்த வேளையிலே
ஏங்க வைத்தாய் பூ மகளே.

உன்னை பார்த்தவுடன் அதிசயித்தேன்
பரமனுக்கும் கோடி நன்றி நான் அழிப்பேன்.

உன்னை பார்த்த இந்த சந்தோசத்தில்
பரவசம் தான் அடைந்து விட்டேன்,
பரகதியும் ஆவேன் பூவே.
பரம சுகம் இது தானோடி....?
இல்லை......................................

கவிஞர்: சாதுரியன் 

Tuesday 19 June 2012

உனைப் பார்க்க நான் வந்த போது நீ எங்கே சென்றாய்...?

ஒரு கோடி பூவுக்குள் உருவான பூவே.
உல்லாச வானில் சல்லாபம் கொள்ளும்
சங்கீதம் கூட உன்னோடு தானோ.

உருண்டோடிப் போகும் காலங்கள் நூறு - ஆனால்
எங்கள் அன்பென்ற ஊஞ்சல் எந்நாளும் ஆடும்.

ஊர்விட்டு உளர்வந்து நான்வந்த போது
உன் நெஞ்சில் உன் அன்பு
தேனாறாய் ஓடும்.

உயிர் கூட உனக்காக எனச் சொன்ன போதும்
உனைப் பார்க்க நான் வந்த போது 
நீ எங்கே சென்றாய்...?

மலரே உன்னை மாலையாய் சூட்டுவேன்
மண மாலையாய் ஆட்டுவேன் - என் 
வாழ் நாளில் மணமாது நீ மட்டும் தாண்டி

கலிகாலம் சதிசெய்யும் பலபேரின் வாழ்வில்
கனியாகும் நம் வாழ்வில்
கலங்காத பாசம்.

ஒருநாளும் எனைவிட்டுப் போகாதே பூவே
உனைப் பார்க்க நான் வந்த போது 
நீ எங்கே சென்றாய்...?
உள்ளம் உருமாறி அனலாகிப் போச்சு
நீ எங்கு சென்றாய்...?

கவிஞர்: சாதுரியன் 

Friday 8 June 2012

இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா....?


நித்திரை எனக்குக் கிடையாது
என் நினைவுகள் எப்பவும் தொலையாது.
பத்தரை மணிக்குமேல் தனிமையிலே
பரதேசியாய் தினமும் உலாவுகிறேன்.

பாவி என் நெஞ்சிலே பால்வார்க்க
தேவியை ஒருமுறை வரச்சொல்லு.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?

பிரமனைக் கூட வரவளைப்பேன்
விதவிதமாக கெளரவிப்பேன்.
என்னவள் போல இனி ஒருத்தி
மண்ணினில் வேண்டாம் எனவுறைப்பேன்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?

என் கற்பனை கடந்த காவியமே
கம்பன் கீதையை வென்ற ஓவியமே.
கற்பனை ஆற்றினில் குளிக்க வைத்தாய்
என்னை காமனை போலவே நினைக்க வைத்தாய்.

காற்றினில் தென்றல் ஆனாலும் 
உனக்கினி சேதிகள் சொல்லமாட்டேன்.
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?

கவிஞர்: சாதுரியன்  

Monday 28 May 2012

அன்பே என்னுடன் எதற்க்காக பேச மறுக்கிறாய்...!!!

பாசம் வளர்த்தேன் பழகத் துடித்தேன்
காலம் முழுதும் கவிதை வடிப்பேன்.
கலங்க வைக்கும் கவிதை நீயோ..?

தேகம் வியர்க்கும் நிலமை எனக்கு
அள்ளிக் கொடுத்த அழகுத் தளிரே.
எந்த உறவும் உன்னை விடவும்
எந்தன் வாழ்வில் என்றும் இல்லை.

கொஞ்சும் மழலைக் குழந்தை நீயே
கூடிக் குலவும் நிலமை தாவேன்.
அஞ்சும் நிலமை எனக்கு வேண்டாம்
அணைக்கும் நினலே அருகில் வா நீ.

பஞ்சவர்ணக் கிளியே எந்தன் 
பருவ முல்லைக் கோடியே நீயும்.
உருவம் மறைத்து தினமும் என்னை
உருக வைத்தல் சரியோ கண்ணே.

நீண்ட வானில் வர்ணம் தீட்ட
துணிந்து விட்ட கலைஞன் ஆனேன்.
வானவில்லை போலே நீயும் - பல
வர்ணம் போல எண்ணம்மாரி
என்னை ஏன்தான் கொல்ல நினைத்தாய்..?

வண்ணத் தமிழில் உன்னை வடிக்க
வார்த்தை தேடி ரொம்பக் களைத்தேன்.
உந்தன் மனதின் எண்ணம் அறிய
வங்கக் கடலில் மூழ்கத் துடித்தேன்.

தமிழின் அர்த்தம் கண்டேன்.
கடலின் ஆழம் கண்டேன்.
உன்னை வடிக்க வார்த்தை இல்லை.
உன் மனதின் ஆழம் காணவேண்டி 
உறக்கம் கலைத்தேன்.
உதிரம் வடித்தேன்.

முடியவில்லை எந்தன் உயிரே,
முடிவு கூட எந்தன் உயிரே.

கண்ணின் மணியே என் கண்ணின் ஒளியே
உன்னை விட்டுப்பிரிய என்றும் நினைக்கேன்.
பேசமறந்தால் என்னை மறப்பேன்.
உயிரை துறப்பேன்.
அன்பே என்னுடன் எதற்க்காக பேச
மறுக்கிறாய்...!!!



கவிஞர்: சாதுரியன்  

Wednesday 16 May 2012

நீ விட்டு சென்ற சுவடு இன்றும் என் நெஞ்சில் நிலைப்பதாலே........!!!

எந்தன் மன தோட்டத்துக்குள்
வீசி போன தென்றல் காற்றே.
ஏன் தான் நீயும் ஓடிப்போனாய்
எங்கே நீயும் வீசுகின்றாய்...?

என்னில் நீயும் வீசும் போது
அள்ளி உன்னை அனைத்து கொண்டேன்.
அரவம் போல வந்து என்னுள்
உலவிப்போன பின்னும் - எந்தன்
நெஞ்சில் சுவடு மாறவில்லை
நினைவு என்றும் அழியவில்லை.

பொங்கு தமிழ் தென்றல் காற்றே
பொழியும் மாறி உந்தன் மூச்சே.
போவாய் என்று நினைக்கவில்லை.
போன பின்னே எந்தன் நிலை
மாறிப்போச்சு - என்
கண்ணும் இங்கே மாறியாச்சு.

கவலை கொள்ளவில்லை நானும்
கற்றுவிட்டேன் வாழ்க்கைப் பாதை.
விபரம் உள்ள மனிதனாக்கி
போன தென்றல் காற்றே கொஞ்சம்
புதிய நிலை பார்த்து சொல்லு.

புகழ்ச்சி நானும் பொற்று வாழ
புலமை தந்த புனிதம் எல்லாம்
உன்னைச் சேரும்.
கலக்கமில்லா கலவை நீயோ - இன்றும்
என் உறக்கம் போக்கும் குழவி நீயோ...?

வணங்குகிறேன் உந்தன் நிலைக்கு
கிறங்கவில்லை நானும்.
நீ விட்டு சென்ற சுவடு இன்றும்
என் நெஞ்சில் நிலைப்பதாலே........................


கவிஞர்: சாதுரியன் 

Monday 7 May 2012

என் இதயத்துக்கு ஒளிகொடுத்த என் நிலாவுக்கு பிறந்த தினம்...!!!

ஓடுகின்ற வெண்ணிலாவே
ஒரு நிமிடம் நில்லாயோ.
உன் அழகை விஞ்சிவிட்ட
என்னவளை பார்க்க என்று 
ஒரு நிமிடம் நில்லாயோ.


காடு மலை ஏறி போகும்
கறுப்பு நிலா நீ.
தங்க ரதம் ஏறி வரும்
தங்க நிலா பார்க்க நிற்காயோ.


பாதி நாளில் தேய்ந்து நீயும்
பௌர்ணமியாய் உருவம் காட்டுவாய்.
என் பருவ நிலா எப்பொழுதும்
வளர்ந்து வளர்ந்து முழு உருவம் காட்டுவாள்.


நீ தோன்றிய ஆண்டு பல கோடி
தினம் தேய்ந்து தானே வளர்கிறாய்.
இவள் தேன்றிய ஆண்டு மூவேழு
முடிந்து வருடம் இரண்டாச்சு.


இன்றும் பூத்து குலுங்குகிறாள்
பிறந்த நாளில் பௌர்ணமியாய்
விளங்குகின்றாள்.


பார்த்து நீயும் சென்று விடு
பாதியான வெண்ணிலாவே.
சேதி ஒன்று சொல்லிவிடு
அவள் சிரிப்பொலியை கொள்ளையிடும்
மன்னவன் நான் தான் என்ற
சேதி ஒன்று சொல்லிவிடு.


கவிஞர்: சாதுரியன் 

Wednesday 11 April 2012

சித்திரங்கள் நான் வரைந்தால் உன் முகம் தான்...!!!

என் நெஞ்சமதில் வந்தமர்ந்த
வஞ்சி மகளே.
என் சொந்தமெல்லாம் நீ ஆன
தங்க நிலவே.


இன்பம் என்ற சொர்க்கமதில்
என்னை அமர்த்தி - இப்போ
ஏக்கமுடன் எனை விட்டு
எங்கு சென்றாய்...?


கற்பனைக்குள் சிக்காத
கனக மணியே.
என்னை விற்பனைகள் செய்துவிட
ஏன் தான் துணிந்தாய்.


சொர்ப்பனத்தில் எப்பொழுதும்
நின் முகம் தான்.
அற்புதம் நான் என்பதனை
ஏன் மறந்தாய்.


உட்சவம் தான் தினம் நடக்கும்
என் மனதில் - உருவம்
கற்சிலை போல் ஆன நிலை
ஏன் அடைந்தாய்.


பொற்கிளியாய்  உன்னை அள்ளி
பூட்டி வைத்தேன் - பொன்மகளே
போதும் என்றா என் மனதில்
புளியை வார்த்தாய்.


சித்திரங்கள் நான் வரைந்தால்
உன் முகம் தான்.
சித்திடையே என்னவளே
ஒரு வரம் தா.


சிற்றுளி போல் எனை உருக்கி
சிலைகள் செய்யாயோ.
உன் உருவம் போல் - பல
சிலைகள் செய்வாயோ.




கவிஞர்: சாதுரியன் 




Saturday 10 March 2012

உன்னை சுமந்த எந்தன் மனசு விம்மி விம்மி அழுதே......!!!

வாலிபம் என்னை வாட்டுது 
வண்ணமகள் உன் நினைவால்.

நானிருந்த நாட்கள் 
கொஞ்சம் என்று - ஆனாலும் 
நீயமர்ந்த பின்பே என் மனம் 
நின்மதி பெற்றதடி 

சொந்தம் என்று 
உன்னை சுமந்த எந்தன் மனசு
விம்மி விம்மி அழுதே.
விடியல் காணும் வரை...!


கவிஞர்: சாதுரியன் 


Friday 2 March 2012

என் கல்லறையில் பேசி விடு...!!!

மொழிகளை ஊமையாக்கி
நீ மௌனமாய் இருக்கின்றாய்.
அந்த மௌனமே 
சுட்டெரிக்கும் ரவையாய் - என்
நெஞ்சை துளைத்து செல்கிறது.


சத்தமில்லாத பாசை கூடவா
உன்னிடம் ஊமையாகி விட்டது.
இப்போது தான் புரிகிறது
நீ மௌனிப்பதே.


அப்படியே நான் மண்ணறை ஆனாலும்
மனம் என்னவோ வெளியேதான் உள்ளது.
அப்போதாவது ஒன்று இரண்டு
வார்த்தையை பேசிவிட்டு செல்.
சாமதியாவது சந்தோசமாக உறங்கட்டும்.



கவிஞர்: சாதுரியன் 

Thursday 1 March 2012

என் இதயத்தின் வலி..............!!!

என் நெஞ்சில் 
ஏராளமான காயங்கள் உண்டு.
யாரேனும் கண்டதுண்டா...?


கண்ணீரை கழுவுகின்றேன் 
கவிதைகளாய்...!
கைக்குட்டை தருவாயா 
ஆறுதலாய்...!


நேசிப்பைப் கூட 
வாழ்த்தாய் வசித்தவர்களே.
பாருங்கள் இந்தக் கவிதைகளின் பக்கங்களில்
உங்கள் முகம் கூட 
எங்காவது ஒளிந்திருக்கும்...!


கவிஞர்: சாதுரியன் 


Saturday 25 February 2012

வருடம் ஒன்று ஆனது...!!!

சொந்தம் என்று நான் இருந்தேன் - என்
சொப்பனத்துப் பூம் பொழிலே.
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது என் இதயம்.


சந்தனத்து மேனியிலே
சாய்ந்திருவாய் என நானிருந்தேன்.
சொன்னாயடி ஒரு வார்த்தை...!
சுட்டெரிக்கும் சூரியன் போல - என் இதயம்
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது...!


ஒரு வருடம் ஆனாலும் - ஆறவில்லை
என் இதயம்.
சொல் அம்பு தைத்தவுடன்
சுறு சுறுப்பு இழந்து போனேனடி.


சோர்ந்து தாடியுடன் - ஒரு
பேடியும் ஆனேனடி - போடி
 பைத்தியக்காரி - நானும்
பைத்தியம் தாண்டி...!


கவிஞர்: சாதுரியன் 

Friday 24 February 2012

மழை மழையாய்...!

"மழையே
சாலையை
நன்றாகக்
கழுவி விடு
பூப்பெய்தியபின்
என்னவள்
பூமியில்
கால் வைக்கிறாள்"

-கவிதை நூல்: மழை மழையாய்.
கவிஞர் : அசன்பசர்.-