நித்திரை எனக்குக் கிடையாது
என் நினைவுகள் எப்பவும் தொலையாது.
பத்தரை மணிக்குமேல் தனிமையிலே
பரதேசியாய் தினமும் உலாவுகிறேன்.
பாவி என் நெஞ்சிலே பால்வார்க்க
தேவியை ஒருமுறை வரச்சொல்லு.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?
பிரமனைக் கூட வரவளைப்பேன்
விதவிதமாக கெளரவிப்பேன்.
என்னவள் போல இனி ஒருத்தி
மண்ணினில் வேண்டாம் எனவுறைப்பேன்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?
என் கற்பனை கடந்த காவியமே
கம்பன் கீதையை வென்ற ஓவியமே.
கற்பனை ஆற்றினில் குளிக்க வைத்தாய்
என்னை காமனை போலவே நினைக்க வைத்தாய்.
காற்றினில் தென்றல் ஆனாலும்
உனக்கினி சேதிகள் சொல்லமாட்டேன்.
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னைப் போல் ஒருத்தி கிடைப்பாளா..?
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment