Wednesday, 16 May 2012

நீ விட்டு சென்ற சுவடு இன்றும் என் நெஞ்சில் நிலைப்பதாலே........!!!

எந்தன் மன தோட்டத்துக்குள்
வீசி போன தென்றல் காற்றே.
ஏன் தான் நீயும் ஓடிப்போனாய்
எங்கே நீயும் வீசுகின்றாய்...?

என்னில் நீயும் வீசும் போது
அள்ளி உன்னை அனைத்து கொண்டேன்.
அரவம் போல வந்து என்னுள்
உலவிப்போன பின்னும் - எந்தன்
நெஞ்சில் சுவடு மாறவில்லை
நினைவு என்றும் அழியவில்லை.

பொங்கு தமிழ் தென்றல் காற்றே
பொழியும் மாறி உந்தன் மூச்சே.
போவாய் என்று நினைக்கவில்லை.
போன பின்னே எந்தன் நிலை
மாறிப்போச்சு - என்
கண்ணும் இங்கே மாறியாச்சு.

கவலை கொள்ளவில்லை நானும்
கற்றுவிட்டேன் வாழ்க்கைப் பாதை.
விபரம் உள்ள மனிதனாக்கி
போன தென்றல் காற்றே கொஞ்சம்
புதிய நிலை பார்த்து சொல்லு.

புகழ்ச்சி நானும் பொற்று வாழ
புலமை தந்த புனிதம் எல்லாம்
உன்னைச் சேரும்.
கலக்கமில்லா கலவை நீயோ - இன்றும்
என் உறக்கம் போக்கும் குழவி நீயோ...?

வணங்குகிறேன் உந்தன் நிலைக்கு
கிறங்கவில்லை நானும்.
நீ விட்டு சென்ற சுவடு இன்றும்
என் நெஞ்சில் நிலைப்பதாலே........................


கவிஞர்: சாதுரியன் 

No comments:

Post a Comment