வானை விட்டு நிலவு கொஞ்சம்
விலகிச் சுற்றி கொண்டால் கூட.
இருட்டு என்று நொந்து கொள்வோம்.
என்னை விட்டு தள்ளி போனாய்
குருட்டு வாக்கு என்று சொல்லி.
கேலி செய்து உலகம் இங்கே
திருட்டு பட்டம் தந்தாள் கூட
விரும்பி நானும் ஏற்றிருப்பேன்.
உன்னை திருடி விட்ட சந்தோசத்தில்
திருந்தி நானும் வாழ்ந்திருப்பேன்.
உருகி விட்ட பணியை போல
ஓடும் தண்ணீர் ஆனேன் நானே.
உன்னை உறைய வைக்கும் நிலைமை எனக்கு
என்று கொடுப்பாய் பூவின் தேனே.
புதுமை தீயே புரியும் நிலமை
அறிவாய் நீயே...!!!
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment