அழகிய கார்கால மேகமாய்
அழுகையின் கொடுமைகள்
நெஞ்சில் ஏறமாய்.
வெண்முகில் விலத்திய
தேன் நிலவாய்.
பட்டாடை போர்த்தி
என்னவள்.
பருவ காலங்களை
வென்றவள்.
பருவமடைந்த
பாவையாய்.
உருவங்களை என்னுள்
பதிய வைத்தவள் - முழு
உருவமாய் என்றும்
என்னில் நிறைந்தவள்.
கனவுகள் என்றும் தந்தவள்
கவிதைக்கு கவிதையானவள்
கவிக்கும் என்
தாடிக்கும் காரணமானவள்...!
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment