Wednesday, 2 January 2019

கற்சிலையே உனை வடித்த சிற்றுளி நான்....!!!



சொற்பனங்கள் தினம் உனக்கு 
சுகம் கொடுக்கும்
அற்புதத் தேர் நான் உனக்கு
வரம் கொடுப்பேன்

கற்சிலையே உனை வடித்த
சிற்றுளி நான்
கற்பனையில் நீ எனக்கு
பொற்கிளி தான்

இப்பிறவி எடுத்த சுகம்
நீ கொடுத்தாய்
எப்பொழுதும் இன்பசுகம்
உன் மடியில் தான்

என் மனது கல்லில்லை
உளிகள் செய்யாதே - சொல்
உளிகள் செய்யாதே...!

கவிஞர்: சாதுரியன்

No comments:

Post a Comment