Wednesday, 13 February 2019

காதலின் தினம்...!



காதல் வேண்டும் காதல் வேண்டும்
காயம் இரண்டும் கலக்க வேண்டாம்
கலக்கம் வேண்டாம் 
கண்ணில் மட்டும்  ஒளிக்க வேண்டும்

உறவு கொள்ள 
நினைக்க மறந்தால் 
இமைகள் என்றும் 
சேர மறுக்கும்

உதிரம் தண்ணில் 
பதிந்த உயிரே 
உன்னை இன்றி 
வாழ்வு வேண்டாம்

வேண்டும் வேண்டும் 
அன்பு வேண்டும்
விடியும் பொழுதில் 
உந்தன் விழியில் 
புதையும் நிலமை 
என்றும் வேண்டும்...!

கவிஞர்: சாதுரியன் 

No comments:

Post a Comment