மொழிகளை ஊமையாக்கி
சத்தமில்லாத பாசை கூடவா
அப்படியே நான் மண்ணறை ஆனாலும்
கவிஞர்: சாதுரியன்
நீ மௌனமாய் இருக்கின்றாய்.
அந்த மௌனமே
சுட்டெரிக்கும் ரவையாய் - என்
நெஞ்சை துளைத்து செல்கிறது.
சத்தமில்லாத பாசை கூடவா
உன்னிடம் ஊமையாகி விட்டது.
இப்போது தான் புரிகிறது
நீ மௌனிப்பதே.
அப்படியே நான் மண்ணறை ஆனாலும்
மனம் என்னவோ வெளியேதான் உள்ளது.
அப்போதாவது ஒன்று இரண்டு
வார்த்தையை பேசிவிட்டு செல்.
சாமதியாவது சந்தோசமாக உறங்கட்டும்.
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment