எனது நினைவு உனது நிழலில்
கலந்து கொண்டதை
நிலவு வந்த பொழுது நீயும்
அறிந்ததில்லையோ
உலவுகின்ற நிலவாய்
எனது மனதில் நீயும்
உரசும் போது கூட
உணரவில்லையோ நீயும்
இன்பசுகம் அறிந்ததில்லையோ
இன்பசுகம் அறிந்ததில்லையோ
என் உருவம் வந்து உன்னுள்
உறக்கம் கொள்ளும் முன்பே - என்
நினைவு உந்தன் நெஞ்சை
நெகிழவைத்தது ஏனோ..?
பருவ வெண்ணிலாவே
பருக என்னை நீயும்
நாளை எண்ணி வாழ்ந்திடு
நானும் உன்னை எண்ணியே
மெழுகாய் மெல்ல உருகிறேன்
நெஞ்சில் சோகம் வேண்டாம் கண்ணே
நிலவை போல தேயாதே
உறவில் நாளும் நானே தானே
உணர்வு முழுதும் உனக்கு தானே
உயிரும் நீயே...! உணர்வும் நீயே...! உள்ளமும் நீயே...!
கவிஞர்: சாதுரியன்
No comments:
Post a Comment