Wednesday, 27 March 2019

உன்னுள் வாழ்கின்றேன் நான்...!!!



பொன் முட்டை இடுகின்ற
பெண் அன்னமே
என்னாலும் உன் நெஞ்சுக்குள்
என் எண்ணமே.

கண்ணுக்குள் படம் போட்டு
தினம் காட்டுறாய்
கண் முன்னே வந்த பின்பு
ஏமாற்றுறாய்
கவி பாடும் பேர் கொண்ட
உன் நெஞ்சுக்குள்
கலங்காத எண்ணங்கள் எங்குள்ளது..?

ஒரு நாளில் உயிர் கொல்லும்
பேராசை எனக்கில்லையே
ஒவ்வெரு நாளும்
உன் எண்ணம் எனக்குள்ளது 
செவ்வந்தி தோட்டத்திலே
நீ நின்ற வேளை
செவ் அந்தி பொழுது நேரம்
நான் அங்கு வந்தேன்.

பொன்வண்ணமே
நான் வந்து பூச்சூடவா
பெண் அன்னமே
நான் உனைச்சூடவா..?

வின் மீன்கள் 
எமை வந்து தேடட்டுமே
விடி காலை வரும் மட்டும்
மலரட்டுமே
விரிசல்கள் இல்லாத
எம் அன்பு தொடரட்டுமே.

கண்ணுக்குள் எரிகின்ற
ஒளி தீபமே
காதலின் பெயர் சொல்ல
என்னவேணுமோ....?
என்னை வேணுமோ....? 

கவிஞர்: சாதுரியன் 

Sunday, 24 March 2019

உனக்காக தானே காத்திருந்தேனே..!



கொடி முல்லைப் பூவே
நீ கொல்லி மலை தேனே
விதி உள்ள நாள் எல்லாம்
உன் கூட தானே
என்றென்னி நானும்
உனக்காக தானே காத்திருந்தேனே...!!!

கண் மூடி நானும்
துயில் கொள்ள போவேன்
கடிகார முள்ளோ
அதிகாலை  காட்டும்
என் கண்கள் ஏனோ
துயில் கொள்ளவில்லை
உன்னைக் காணும் வரைக்கும்
துயில் என்ற வார்த்தை
எனைக் கொல்லும் விஷமோ...?

என்னோடு நாளும்
உறவாடும் பூவே
தண்ணீரில் மீனாய்
கலக்கங்கள் வேண்டாம்
எந்நாளும் நானே
உனக்காக தானே
உயிரோடு வாழ்வை
தினம் கொண்டு போறேன்
என்னிடம் வா நீ
உனக்காக தானே
கத்திருப்பேனே...!!!


கவிஞர்: சாதுரியன்

Saturday, 23 March 2019

இன்றே பொழுது புலருமுன் முடித்து விடு என் வாழ்க்கையை...!



பலநாள் பரதேசி வாழ்க்கை  
பார்ப்பார் யாருமின்றி  
பாசமெனும் வேச வலையில் 
பாவியான என் வாழ்க்கை
பதறுதன்பே தினமும் நீயின்றி..!


உறவுகள் பல இருந்தும்  
உமையாகி கிடக்கிறது
என் வாழ்க்கை
உருளுமா என் ஜீவன் இன்னும்
உலகத்தார் மத்தியிலே
உற்றவள் நீயின்றி..!

வஞ்சகத்தார் சதியினிலே
மிஞ்சியது வாசமில்லா கண்ணீர்தான்
மிஞ்சியதும் எனக்கில்லை 
எனை மீட்பார் யாருமில்லை
மீளா துன்பத்தில் ஆழ்கிறது
என் மனம் நீயின்றி..!


இறைவனிடம் வேண்டுகிறேன்
இன்னும் நீயின்றி
என்னால் வாழ முடியாது
இன்றே பொழுது புலருமுன்
முடித்து விடு என் வாழ்க்கையை என்று...!



கவிஞர்: சாதுரியன் 

Monday, 18 March 2019

உத்தமி தான் என்றும் நீ எனக்கு...!



வில்லெடுத்து அன்பு
எய்திடுவாய் என்றிருந்தேன்
வல்ல சொல்லெடுத்து 
அம்பு  எய்து கொன்றிட தான் 
எண்ணம் வந்ததோடி...?

உதிரம் பாய்கிறது 
உடம்பில் ஊனமில்லை
உள்ளம் நோகுதடி
நீயடித்து
உத்தமி தான் என்றும் நீ எனக்கு

கற்பனைகள் 
தினம் உனக்கு,
கனவுகள் தான்
மீதம் எனக்கு
விற்பனைகள் செய்பவளே - மனசு
விற்கும் விலை சொல்லேனடி

சொர்ப்பனங்கள் 
கண்ட மனம்
பாற்கடலில் குளிக்கவென்று 
பாலைவன கானல் நீரில் 
குளிக்கலாயிர்று

தென்றல் காற்றிலே சுகமிருக்கு
என்று போனேன்
சோகமதை அள்ளி தந்து - அந்த
சூறாவளி தான் எனக்கு 
சொந்தமாயிற்று

அழகொழிரும் மனவலிமை
அழிந்தே போச்சு
அழகமைந்த ஆலிலை மர அடி தான் 
சொந்தமாச்சு
அரவணைக்க ஆல்லிலையே
விளுதெரிந்த உறவுகளும் விலகி போச்சு


கவிஞர்: சாதுரியன்

Wednesday, 13 February 2019

காதலின் தினம்...!



காதல் வேண்டும் காதல் வேண்டும்
காயம் இரண்டும் கலக்க வேண்டாம்
கலக்கம் வேண்டாம் 
கண்ணில் மட்டும்  ஒளிக்க வேண்டும்

உறவு கொள்ள 
நினைக்க மறந்தால் 
இமைகள் என்றும் 
சேர மறுக்கும்

உதிரம் தண்ணில் 
பதிந்த உயிரே 
உன்னை இன்றி 
வாழ்வு வேண்டாம்

வேண்டும் வேண்டும் 
அன்பு வேண்டும்
விடியும் பொழுதில் 
உந்தன் விழியில் 
புதையும் நிலமை 
என்றும் வேண்டும்...!

கவிஞர்: சாதுரியன் 

Tuesday, 22 January 2019

ஓர் பூர்வ ஜென்ம பந்தம் தொடர்கின்றது..!



என் இதயத்துடிப்பில்
சிறு மாற்றம்
சாதாரணமாக துடித்த
என் இதயம்
கொஞ்சம் வேகமாக
துடிக்க ஆரம்பித்தது

என் தேவதை
அருகில் இருப்பதை போன்ற
ஓர் உணர்வு

கண்கள் அவளை தேடின
இறுதி வரை
அவள் தென்படவில்லை
என் கண்களுக்கு

பயன முடிவில்
உணர்ந்து கொண்டேன்
அவளுக்கும் எனக்கும் இடையில்
ஓர் பூர்வ ஜென்ம பந்தம்
தொடர்கின்றது என்று...!

கவிஞர்: சாதுரியன் 

Monday, 7 January 2019

கொஞ்சி விளையாட மனம் திட்டம் போடுதே...!



உன் விரல் பட்ட இடம் தன்னில்
விதமான படமொன்று
பதித்து விட்டேன் பச்சையாக

உன் ஐந்து விரல் பட்ட இடம்
வெட்கம் கொள்ளுதே
கொஞ்சி விளையாட - மனம்
திட்டம் போடுதே

நெஞ்சறையில் உன் நினைவு 
நித்தம் உள்ளதால்
ஞ்சனைக்கு சென்று விட
நாட்கள் எண்ணுதே

வித்தை பல கற்ற மனம்
வெட்கம் கொள்ளுதே
அத்தை மகள் நீ எனக்கு
முத்தம் தந்ததால்

என்றுமடி கண்டதில்லை 
இந்த சுகம் நானும் - நீ
தந்த சுகம் அத்தனையும் 
சாகும் வரை காணும்...!

கவிஞர்: சாதுரியன்